ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு

கே.எஸ். அழகிரி

கே.எஸ். அழகிரி

KS Alagiri : ஆளுநர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செய்ய வேண்டுமே ஒழிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு இடையூறு இருப்பவர்களாக இருக்கக் கூடாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக இஸ்லாமியர் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கம்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி அருந்தினார்.

  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ஆளுநரை கண்டித்து, ஆளுநர்  மாளிகையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். ஆளுநருக்கு எதிராகவோ, ஆளுநர் பதவிக்கு எதிராகவோ காங்கிரஸ் கட்சி இல்லை என்று கூறிய அழகிரி, ஆளுநர் பதவி இருப்பது எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என்றும் ஆளுநராக வரக்கூடியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செய்ய வேண்டுமே ஒழிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய அரசாங்கத்திற்கு இடையூறு இருப்பவர்களாக இருக்கக் கூடாது என்றார்.

  மாநில அரசாங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிற அல்லது, பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் மத்திய அரசாங்கத்தின் செயல். ஆனால் ஆளுநர் அந்த தீர்மானத்தை அனுப்பாமல் இருப்பது அவரது மரபுக்கு எதிரானது. இத்தகைய செயல் கோடிக்கணக்கான தமிழக மக்களை புண்படுத்துகிறது.

  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவர்கள் எச்சரிக்கிறார்கள், அல்லது அச்சம் அடைய செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் தமிழக அரசாங்கம் இதற்காக அச்சம் அடையாது. இதை தமிழக காங்கிரஸ் விரும்பவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார்.

  தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, தேர்த் திருவிழாவின் போது உயிரிழப்பு என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது அதற்காக காங்கிரஸ் கட்சி வருந்துகிறது. இச்செயல் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. அரசாங்கம் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். மேலும் மக்கள் கூடுகிற இடங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக தேர் திருவிழாவை நடத்தாமல் விட்டு விடக்கூடாது. மிகவும் பாதுகாப்பாக தேர் திருவிழா நடத்த வேண்டும் என்றார்.

  மின்வெட்டு என்பது தமிழகத்தில் ஒரு வாரம் இருந்தது அதை சரி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த மின்வெட்டானது தமிழகத்தில் மட்டுமல்ல ஏழு, எட்டு மாநிலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு தொகுப்பிலிருந்து நிலக்கரி வருகிறது. ஆனால், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு இல்லை. மோடி அரசாங்கம் அதனை சரிவர கவனிப்பதில்லை. இதனை சுட்டிக்காட்டி 15 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி அவர்கள் மற்ற வேலைகளை செய்வதை விட இதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அதனால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டது எனக் கூறினார்.

  Must Read : சட்டப்பேரவையில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகையைக் கண்டிக்கும் அ.தி.மு.க

  இந்த நிகழ்வின் போது திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு, திமுக நகர பொறுப்பாளர் வி.எஸ் சாரதிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Congress, Governor, KS Alagiri, RN Ravi