Home /News /tamil-nadu /

‘நீங்க தடுப்பூசி போடுங்க… நான் ஆடு மேய்க்கிறேன்…’- வைரல் மருத்துவரின் எக்ஸ்க்லூசிவ் பேட்டி!

‘நீங்க தடுப்பூசி போடுங்க… நான் ஆடு மேய்க்கிறேன்…’- வைரல் மருத்துவரின் எக்ஸ்க்லூசிவ் பேட்டி!

பொதுவாக, கிராமங்களில் இருக்கும் மக்கள் தடுப்பூசிகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்திகள் காரணமாகவே அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசியை எடுக்க தயங்குகின்றனர்.

பொதுவாக, கிராமங்களில் இருக்கும் மக்கள் தடுப்பூசிகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்திகள் காரணமாகவே அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசியை எடுக்க தயங்குகின்றனர்.

பொதுவாக, கிராமங்களில் இருக்கும் மக்கள் தடுப்பூசிகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்திகள் காரணமாகவே அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசியை எடுக்க தயங்குகின்றனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
முன்களப் பணியாளர்களாக திகழும் மருத்துவர்கள் தன்னலமற்ற சேவைக்கு பெயர் போனவர்கள். தங்கள் கடமையில் சமரசமின்றி வாரத்தின் முழு நாட்களும் பணி புரியும் மருத்துவர்களை இந்த கொடூரமான கொரோனா காலத்தில் பார்த்திருப்போம். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்தில் சமீபத்தில் கால்நடையை மேய்ந்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவரை கெளசிக் என்ற மருத்துவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அழைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இணையவாசிகள் பலர் மருத்துவர்களுக்கு ஆதரவாக விவாதங்களையும் கிளப்பியுள்ளனர்.

யாழினி என்ற மருத்துவர் ட்வீட் செய்த, 28 விநாடிகளே வரும் அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்ற உரையாடல் பின்வருமாறு…

மருத்துவர்: நீங்க கொரோனா ஊசி போட்டுகிட்டீங்களா? இல்லனா தயவுசெஞ்சி வந்து போட்டுக்கோங்க...

விவசாயி: நான் ஊசி போட பயப்படல... ஆனா தடுப்பூசி போட்ட பிறகு கை வலி, காய்ச்சல் வரதா பேசிக்கிறாங்க...

மருத்துவர்: அப்படிலாம் எதுவும் இல்ல... உங்களுக்கு ஒன்னும் ஆகாது

விவசாயி: சரி, நான் ஊசி போட்டுக்குறேன். ஆனா, அடுத்த நாளுக்கு என் ஆடு, மாட யாரு வந்து மேய்ப்பா? அடுத்த நாள் நீங்க வந்து என் ஆடு, மாட மேய்ப்பீங்கனு சொன்னா நா இப்போவே ஊசி போட்டுக்குறேன்...

மருத்துவர்: நான் கண்டிப்பா செய்றேன்...

மருத்துவர் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் சுகாதார பணியாளர் ஒருவர் உடனே குறுக்கிட்டு...

“ஏப்பா... இந்த டாக்டர் தானே உன் மனைவிக்கு இரத்த தானம் செஞ்சி காப்பாத்துனாரு... அவர்கிட்ட போய் இப்படி கேக்குற..?” என்று கூறினார்.

மருத்துவர்: சரி, நா உங்களுக்கு தடுப்பூசி போட்டா ஒரு நாள் உங்க ஆடு, மாட மேய்க்கணும். அவ்வளவுதானே?

விவசாயி: ஆமா...

மருத்துவர்: சரி, நீங்க இப்போ ஊசி போட்டுக்கங்க... நா கண்டிப்பா உங்க ஆடு, மாட பாத்துக்குறேன்...

(விவசாயி அந்த இடத்தை விட்டு நகர, வீடியோ அதோடு முடிகிறது)Must Read | தூக்கம்… நோய் எதிர்ப்பு மண்டலம்… என்ன தொடர்பு? ஆய்வுகள் சொல்வது என்ன?

இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு இணையதளத்திற்கு பேட்டியளித்த மருத்துவர் கெளசிக், ‘வீடியோவின் முடிவில் வருவதுபோல் கடைசியாக விவசாயி உரையாடலின் போது அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டார். நான் ஒரு நாளைக்கு தனது கால்நடைகளை மேய்ப்பதற்கு ஒப்புக்கொண்ட பிறகும் அவர் உண்மையில் அந்த இடத்தை விட்டுச்சென்றுவிட்டார். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்ந்து சென்றதும் அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை அவரே திரும்பி வந்து தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மருத்துவர் கெளசிக்


நாட்றம்பள்ளி உட்பட மொத்தம் ஐந்து கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறேன். அதில் 97 முதல் 98 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுவிட்டனர். பொதுவாக, தொலைதூர கிராமங்களில் இருக்கும் மக்கள் தடுப்பூசிகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்திகள் காரணமாகவே அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசியை எடுக்க தயங்குகின்றனர். உண்மையில், நான் விடுமுறை என்பதை எடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் மருத்துவ சேவைக்காக இங்கு வந்த நாளிலிருந்து, கொரோனா முதல் அலை தொடங்கியது, பின்னர் அந்த கொடிய வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது ஒரு சவாலான பணியாக மாறிவிட்டது. ஒரு சுகாதார மருத்துவராக, கிராம மக்களை கொரோனா வைரஸிலிருந்து தடுப்பூசி மூலம் மட்டுமே பாதுகாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டேன். இதனால், கொரோனா இறப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இதற்கிடையில், மாநில அரசும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடினமாக உழைத்து வரும் நிலையில், என் சார்பில் கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் ஆதரவை வழங்க நான் ஒரு முன்முயற்சி எடுத்தேன். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடி குக்கிராமங்களில் தடுப்பூசி போடுவதற்காக சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் தடுப்பூசி கேரியரை எடுத்துச் சென்று வீடு வீடாக தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம் என மருத்துவர் கெளசிக் கூறினார்.

மேலும், இந்த சில நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானவுடன், ‘இந்த மனித சமூகம் மருத்துவரிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறது?’ என்றும் ‘இதுதான் சுகாதார ஊழியர்களுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதையா?’ என்றும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
Published by:Archana R
First published:

Tags: Corona Vaccine, Tamil Nadu, Viral Video

அடுத்த செய்தி