• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளம் : மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்

வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளம் : மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்

தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

வாணியம்பாடியில் மழை நீர் வடியாமல் உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும், சிறுபிள்ளைகளை வைத்து தவித்து வருவதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து. இதன்காரணமாக வாணியம்பாடி சுற்றியுள்ள நீர்நிலைகள் நிரம்பி அதனுடைய உபரி நீரானது நகரப் பகுதிக்குள் புகுந்தன.

    மேலும், அருகிலுள்ள கோவிந்தாபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டி அதனுடைய உபரி நீரானது வாணியம்பாடி நியூடவுன் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள துரைசாமி வீதி, ஜர்ஜ்ப்பேட்டை, திருவள்ளூர் நகர், சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன மழை நீர் சூழ்ந்து கடந்த ஒரு வார காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இதனால் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தண்ணீரை வெளியேற்றவும், கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை கால்வாயில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மேலும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை நீடிக்கிறது. இதனால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. அதே நேரத்தில் மின்சாரம் இல்லாமல் மொட்டை மாடிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

    இதனால் செல்போன் சார்ஜ் செய்ய முடியவில்லை அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இடுப்பு அளவிற்கு தண்ணீரில் நடந்து சென்று வாங்கி வரக்கூடிய நிலை உருவாகி இருக்கின்றன. மழை குறைந்தாலும் தண்ணீர் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும், தங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து மழை நீர் வடியாமல் உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும், சிறுபிள்ளைகளை வைத்து தவித்து வருவதாகவும் அங்கு இருக்கக்கூடிய குடியிருப்புவாசிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

    வெள்ளம்


    மேலும் துரைசாமி வீதியில் சமூகநலத்துறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இங்குதான் உள்ளது அந்த அலுவலகமும் தண்ணீரில் முழுவதும் சூழ்ந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து போன் செய்தாலும் எடுப்பதில்லை எடன வேதனையோடு கூறுகின்றனர்.

    Must Read : பாலாறு-பொன்னையாறு சங்கமிக்கும் மேல்விஷாரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

    எனவே, நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்ணீரை அப்புறப்படுத்தவும் கழிவுநீர் கால்வாய் வழியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி இருக்கக்கூடிய குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    செய்தியாளர் -  M.வெங்கடேசன், திருப்பத்தூர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: