முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மருமகளை கழுத்தறுத்து கொலை செய்த மாமனார்.. திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மருமகளை கழுத்தறுத்து கொலை செய்த மாமனார்.. திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மருமகளை கொலை செய்த மாமனார்

மருமகளை கொலை செய்த மாமனார்

குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பத்தூர் அருகே மருமகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா ( வயது 40) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.கடந்த 2009ஆம் ஆண்டு கந்திலி குமிடிக்கான்ப்பட்டி பகுதியைச் சார்ந்த முருகேசன் மகள் முருகம்மாளை (வயது 36) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மதுனிஷா( வயது11) ரோகித் ( வயது 8) இரு குழந்தைகள் உள்ளன.முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Also Read: அன்வர் ராஜாவின் அடுத்த மூவ் என்ன?

கணவன் மற்றும் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறுகின்றனர். கணவனை பிரிந்த முருகம்மாள் கடந்த மூன்று வருடமாக அவருடைய அப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த அவரது மாமனாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடு எனக்கு சொந்தம் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என மாமனாரிடம் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மாமனார் மற்றும் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் முருகம்மாள் சமையலறையில் இருக்கும் பொழுது மாமனார் மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருமகளை கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் முருகம்மாள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read: பயிர்காப்பீட்டில் கைவைத்த VAO.. மனைவி.. மகள் அக்கவுண்டுக்கு கைமாறிய பணம் - அதிர்ச்சியில் விவசாயிகள்

இதற்கிடையில் மணி நாட்றம்பள்ளி போலீசாரிடம்  மருமகளை வெட்டி கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளார்.மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மருமகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: M.வெங்கடேசன்  (திருப்பத்தூர் )

First published:

Tags: Arrest, Crime News, Death, Murder, Police