• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ. 5 லட்சம் மட்டுமே: வீரமணி

ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ. 5 லட்சம் மட்டுமே: வீரமணி

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

நான் சிறு வயது முதலே கார்களை விரும்பி வாங்கும் பழக்கம் உடையவன். பள்ளியில் படிக்கும்போதே பென்ஸ் காரை பயன்படுத்தி உள்ளேன். என்னிடம் இருக்கும் கார்கள் அனைத்துக்கும் கணக்கு சரியாக உள்ளது என்று கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

  • Share this:
    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து கணக்கில் வராத ரொக்கம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், தன்னிடம் இருந்து  கணக்கில் வராத நகையோ பணமோ எவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்று கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் மதிப்பு ரூ.5 லட்சம்தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்  தொடர்புடைய  இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்,  ரூ.34 லட்சம் ரொக்கம் ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்,  ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கணினி ஹார்டு டிஸ்க், 623 சவரன் தங்க நகைகள்,  47 கிராம் வைர நகைகள், 7.2கிலோ வெள்ளி பொருட்கள்,  வங்கி புத்தகம்,  சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலுள்ள  275 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனை விவரங்கள் தொடர்பாக  இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி,  “லஞ்ச ஒழிப்பு துறையினரால் எனது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கணக்கில் வராத நகையோ பணமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    கே.சி. வீரமணி


    மொத்தமாக என்னிடம் இருந்த நகைகள் 300 சவரன் மட்டுமே. தேர்தல் பிரமாணப் பத்திரத்திலேயே  அதைவிட அதிகமாக கணக்கு காட்டியுள்ளேன்.  மேலும் என்னிடம் லாக்கரில் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறியது உண்மை அல்ல. மொத்தமாக ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே என்னிடம் இருந்தது . அதையும்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்னிடம் திரும்ப அளித்து விட்டனர்

    இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கூடுதலாக ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது!


    மேலும் என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சொன்ன மணல் நான் வீடு கட்டுவதற்காக ரசீதுடன் வாங்கி வைத்துள்ளேன். எனவே அதையும் சரிபார்த்து என்னிடமே திருப்பி அளித்து விட்டனர்.  மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் சிறு வயது முதலே கார்களை விரும்பி வாங்கும் பழக்கம் உடையவன். பள்ளியில் படிக்கும்போதே பென்ஸ் காரை பயன்படுத்தி உள்ளேன். என்னிடம் இருக்கும் கார்கள் அனைத்துக்கும் கணக்கு சரியாக உள்ளது. என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் விண்டேஜ் வகையை சேர்ந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் தான் இருக்கும்.

    மேலும் நான் சிறுவயதிலிருந்தே வியாபார குடும்பத்தைச் சார்ந்தவன். எனவே என்னிடம் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணமோ கணக்கில் வராத  ஒரு அடி நிலமும் இல்லை.

    ஆனால் சமூக வலைத்தளங்களில் என்னிடம் கோடி கோடியாக பணமும் வைரம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வரும் பொய்யான தகவல்கள் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.

    மேலும் படிக்க: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி : உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு


    எனவே என்னிடம் கணக்கில் வராத எந்தவிதமான நகையோ பணமோ பொருளோ லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்ற படவில்லை ” என்று தெரிவித்தார்.

    35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்,  ரூ.34 லட்சம் ரொக்கம் ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்,  ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கணினி ஹார்டு டிஸ்க், 623 சவரன் தங்க நகைகள்,  47 கிராம் வைர நகைகள், 7.2கிலோ வெள்ளி பொருட்கள்,  வங்கி புத்தகம்,  சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலுள்ள  275 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: