• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • வட்டி கேட்டு மிரட்டியதால் தீக்குளித்தேன் - நெல்லை பெண் பரபரப்பு வாக்குமூலம்

வட்டி கேட்டு மிரட்டியதால் தீக்குளித்தேன் - நெல்லை பெண் பரபரப்பு வாக்குமூலம்

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

மருத்துவமனையில் இருக்கும் ரேகா பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், வீரவநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  வட்டிகேட்டு வாலிபர் மிரட்டியதால் தீக்குளித்ததாக இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

  நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன். சென்னையில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 32). இத்தம்பதியினருக்கு பிரவீன் (வயது 11), தன்யாஸ்ரீ  (வயது 7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வேலை பார்த்து வரும் பிரதாபன் ஊருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவது வழக்கம்.  தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் சென்னையில் அவர் தங்கியுள்ளார்.

  Also Read: விவாகரத்து கேட்ட மனைவி.. மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் - சாத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  இந்நிலையில் கடந்த ஜூன் 17-ம் தேதி பிரதாபனின் மனைவி ரேகா  தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.  அவரது உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக தீக்குளித்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  ரேகா தீக்குளித்த தகவலறிந்த பிரதாபன் நெல்லைக்கு விரைந்து வந்தார். தனது மனைவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சென்று பார்த்தபோது,அவரிடம் கடன் கொடுத்த வாலிபர் வட்டி கேட்டு அவதூறாக பேசி, துன்புறுத்தியதால் தீக்குளித்ததாக கூறியுள்ளார். இதை அவரது கணவர் பிரதாபன் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

  Also Read: ‘விடுங்க சார்..ஐயோ அடிக்காதீங்க’ - சோதனை சாவடியில் வியாபாரி முருகேசனை போலீஸ் தாக்கும் அதிர்ச்சி வீடியோ

  அந்த வீடியோவில், “கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பகுதியைச் சேர்ந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். தொடர்ந்து வட்டி கொடுத்து வந்தாலும், தற்போது கணவருக்கு சமையல் தொழில் முடக்கம் காரணமாக வட்டியை கொடுக்க முடியவில்லை. இதனால் வட்டியை வசூலிக்க வந்த வாலிபர் என்னையும், குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி துன்புறுத்தினார்.  மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால், உன்னுடைய குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். அதன்காரணமாக நான் வெளியே சொல்லவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வட்டி கேட்டு வந்த நபரின் அவதூறு வார்த்தைகளால் மனம் நொந்த நான், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தேன். என்னை தற்கொலைக்கு தூண்டிய அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பேசியுள்ளார். மருத்துவமனையில் இருக்கும் ரேகா பேசிய இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், வீரவநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் இதுகுறித்து வீரவநல்லூர்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .முதலில் குடும்ப சூழல் காரணமாக தீக்குளித்ததாக கூறிய அவர் மீண்டும் வரும் தகவல்கள் தற்போது மாறுபட்டு வருவதால் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

  செய்தியாளர் - ஐயப்பன்

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: