ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருப்பத்தூர் அருகே பருத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே பருத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல்

பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

Tirupattur : திருப்பத்துர் பருத்தி விவசாயிகளிடம், அவர்களின் கோரிக்கை நிறைவேற வழி வகை செய்யப்படும் என்றும், எனவே சாலை மறியலை கைவிடும்படியும் கூறி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் வேளாண் உழவர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் விடப்படும். அதன்படி இந்த ஆண்டு பருத்தி ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், திருவண்ணாமலை, சிங்காரப்பேட்டை, மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களுடைய பருத்தியை இந்த வேளன் உழவர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பது வழக்கம்.

கோயம்புத்தூர், திருப்பூர், சென்னிமலை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால், கடந்த வாரம் ஆர்.சி.எச்.எனப்படும் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூபாய் 15,000 விற்கப்பட்டது.

இந்நிலையில், அதே பருத்தியை இந்த வாரம் 13,741 ரூபாய்க்கு மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜன் மற்றும் செயலாளர் வெங்கடேசன் குறைந்த விலைக்கு கேட்பதாக கூறி பருத்தியை கொண்டு வந்த விவசாயிகள் மாடப்பள்ளி வழியாக ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், பருத்தி விவசாயிகளிடம் தங்கள் கோரிக்கை நிறைவேற வழி வகை செய்யப்படும் எனவே மறியலை கைவிடும்படி சமரசத்தில் ஈடுபட்டனர் இருப்பினும் சமாதானமாகத பருத்தி விவசாய வியாபாரிகள் மாடப்பள்ளி வேளாண் உழவர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : M.வெங்கடேசன், திருப்பத்தூர்.

First published:

Tags: Farmers, Protest, Tirupattur