வீட்டின் மேற்கூரை மீது ஏறி வெப்பத்தை தணிக்க முயன்ற சிறுவன்.. நேர்ந்த விபரீதம்...
வீட்டின் மேற்கூரை மீது ஏறி வெப்பத்தை தணிக்க முயன்ற சிறுவன்.. நேர்ந்த விபரீதம்...
முகமது ஜக்கரியா
Thiruppathur | முகமது ஜக்கரியா குடியிருக்க கூடிய வீட்டின் மேல் கூரை மீது ஏறி வெப்பத்தை குறைப்பதற்காக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டின் மேற்கூரை மீது ஏறி வெப்பத்தை தணிக்க தண்ணீர் ஊற்ற முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சனாவுல்லா. இவருக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் என 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் சனாவுல்லா மற்றும் அவரது மகன் முகமது ஜக்கரியா பெங்களூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது ரம்ஜான் பண்டிகை தொடங்கிய நிலையில் தந்தை மகன் இருவரும் பெங்களூரில் இருந்து ஆம்பூருக்கு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கூரை வீடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகளில் வசிக்கக்கூடிய மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முகமது ஜக்கரியா குடியிருக்க கூடிய வீட்டின் மேல் கூரை மீது ஏறி வெப்பத்தை குறைப்பதற்காக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது வீட்டின் மேலே சென்ற மின்சார கம்பி முகமது ஜக்கரியா மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் முகம் முழுவதும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே முகமது ஜக்கரியா உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செய்தியாளர்: வெங்கடேசன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.