ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கலெக்டர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி! திருப்பத்தூரில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி! திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலகம் முன்  பெண் தீக்குளிக்க முயற்சி!

திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் மீது சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த பொழுதும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதிலும் அவருடைய கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின் போது சாராய கும்பால் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக பகுதி இளைஞர்கள் தாலுக்கா காவல் நிலையத்தில் சாராய விற்பனை குறித்து புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அன்று மாலை சாராய வியாபாரியின் அடியாட்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை, கால், மண்டைகள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வாணியம்பாடி தாலுகா  போலீசார் தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (35) இவரையும் கைதுசெய்து தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த அவருடைய மனைவி மணிமேகலை (30) மற்றும்  பூஜா (8) கிஷோர் (7) திலீபன் (5) என மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அரங்கில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் திடீரென மணிமேகலை தனது குழந்தைகளுடன் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

Also Read : 39 விநாடிகளில் கட்டைவிரலால் 108 ஓடுகளை உடைத்து கடலூரில் கராத்தே மாணவர் சாதனை

இதனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர் பின்னர் வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மணிமேகலை கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி வெளியே கொண்டு வந்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்திற்கு மணிமேகலை அழைத்துச் செல்லப்பட்டார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் திடீரென பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

First published:

Tags: Crime News, Thirupathur