• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • பெற்ற மகனை தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாய்- ஆம்பூர் கொலையில் திடீர் திருப்பம்

பெற்ற மகனை தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாய்- ஆம்பூர் கொலையில் திடீர் திருப்பம்

ஆம்பூர் கொலை

ஆம்பூர் கொலை

நடிகர் சூர்யா நடித்த நந்தா படத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் கதைபோல் ஆம்பூர் அருகே பெற்ற மகன் மீது கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 • Share this:
  ஆம்பூர் அருகே பெற்ற மகனை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த தாய் கைது.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி இவரது கணவர் புகழேந்தி இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி ராஜேஸ்வரியை விட்டு சொந்த ஊரான வேலூருக்கு புகழேந்தி சென்றுள்ளார்.

  இந்தநிலையில் 3 ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார் ராஜேஸ்வரி. இவரது இரண்டாவது மகனான  கட்டிட தொழிலாளி சிவக்குமார் (வயது 35). இவருக்கு கௌரி என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளன.சிவகுமார் வேலைக்கு செல்லாமல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி வழக்குகள் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

  Also Read: திருமணத்தை மறைத்து நிச்சயதார்த்தம்.. காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன் - குடும்பத்துடன் இளைஞர் தலைமறைவு

  சிவக்குமார் கௌரி தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரை விட்டுப் பிரிந்து அருகில் உள்ள நாச்சார்குப்பம் பகுதியில் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் பிரிந்திருந்த கணவன் மனைவியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சமரசம் பேசி ராஜேஸ்வரி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்

  இந்த நிலையில் நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியிலுள்ள தனது வீட்டின் வெளியே சிவக்குமார் திண்ணையில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிவகுமார் மீது தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

  Also Read:  உன் மகன் உயிருக்கு ஆபத்து.. விதவை பெண்ணிடம் நூதன மோசடி - போலி சாமியாரை பிடித்து கொடுத்த மக்கள்

  விடியற்காலையில் சிவகுமாரின் தாய் ராஜேஸ்வரி  கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது சிவகுமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தின் பேரில் கிராமிய போலீஸார் விரைந்து சென்ற சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சடலத்தின் அருகே கல் மீது சாணத்தை ஊற்றி உள்ள கல்லை  கைப்பற்றி, மற்றும் இறந்துபோன சிவகுமாரின் மனைவி மற்றும் அவருடைய தாயார் ஆகியோரை அழைத்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர்

  சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி நேரில் சென்று சிசாரணை செய்தார். அதனைத் தொடர்ந்து மோப்பநாய் சிம்பா வரவழைத்து குற்றவாளிகளை தேடிப்பிடிக்க ஈடுபட்டனர். அந்த மோப்ப நாய் ஆனது அவரது வீட்டை மூன்று முறை சுற்றி வந்து இருந்தபோதிலும் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை வரை ஓடிச்சென்று நின்று விட்டது

  அதனை தொடர்ந்து ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணையை தீவிரப்படுத்தினர் கொலை நடந்த இடத்தில் அருகில் கல் மீது சாணம் கரைத்து ஊற்றிய இருந்த நிலையில். இது அருகில் உள்ளவர்கள் தான் செய்திருப்பார்கள் என போலீசாரின் பார்வை அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோருடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

  அப்போது ராஜேஸ்வரி முன்னுக்கு முரணாக பதில் அளித்தார் அதனை தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவகுமாரின் தாயார் தன் மகனை தானே தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து கொலை செய்வதற்கான காரணத்தை வாக்குமூலமாக ராஜேஸ்வரி கூறினார்..

  என்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நேரத்தில் மூன்று பிள்ளைகளை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்ததாகவும் இந்த நிலையில் எனது மகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாகவும் சம்பவம் நடந்த அன்று வீட்டிற்கு வந்த என்னுடைய மகன் சிவக்குமார் மதுபோதையில் என்னிடமும் அவரது மனைவியிடமும் மிகுந்த தகராறில் ஈடுபட்டதாகவும்.

  அதே நேரத்தில் எங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டியதாகவும் இதனால் நாங்கள் பயந்து போய் அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்ததாகவும்.மேலும் சிவகுமாரின் மனைவி கௌரியை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு பின்னர் நான் அருகில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் பின்னர் என்னுடைய மகன் மதுபோதையில் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பொழுது நான் அங்கு சென்று என் மகன் மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டதாகவும்.இதனை மறைக்க கல் மீது சாணத்தை ஊற்றி ரத்தக்கறைகளை மறுத்ததாகவும், வாக்குமூலமாக ராஜேஸ்வரி அளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நடந்த விஷயத்தை செயல்முறை விளக்கமாக காண்பித்தார் அதனைத் தொடர்ந்து அவரை மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  நடிகர் சூர்யா நடித்த நந்தா படத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்ற தாய் கதைபோல் ஆம்பூர் அருகே திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த பெற்ற மகன் மீது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: M.வெங்கடேசன் ( திருப்பத்தூர்)   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: