ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

சேமியா பிறை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்

சேமியா பிறை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்

கடையின் உரிமையாளர்  முகம்மது சர்தார் என்பவரின் மகன் முகம்மது சாலீக் சேமியா பிரை போன்ற உணவு வகைகள் எல்லாம் மாலை நேரங்கள் மட்டும்தான் கிடைக்கும் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆம்பூரில் தனியார் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனை சரமாரியாக தாக்கிய அதிமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ரயில் நிலையம் எதிரில் தனியார் உணவகம் நடத்தி வருபவர் முகமது சர்தார் மற்றும் அவரது மகன் முகமது சாலீக்.  ஊரடங்கு என்பதால் உணவகத்தில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்று நண்பர்களான ஆம்பூர் அதிமுக 36-வது வார்டு கிளை கழக செயலாளர் தயாளன் மற்றும் முன்னாள் ஆம்பூர் நகர காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் கடைக்கு சென்று சேமியா பிரை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர்  முகம்மது சர்தார் என்பவரின் மகன் முகம்மது சாலீக் சேமியா பிரை போன்ற உணவு வகைகள் எல்லாம் மாலை நேரங்கள் மட்டும்தான் கிடைக்கும் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு நீங்கள் எதற்கு ஓட்டல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டு  முகமது சாலீக் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை எடுத்தும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் காயமடைந்த முகமது சாலீக் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனுடைய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆம்பூர் 36-வது வார்டு அதிமுக கிளை செயலாளர் தயாளன் மற்றும் ஆம்பூர் காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் பிரபு ஆகியோர் கடைக்குள் நுழைந்து தாக்கியதாக தெரியவந்தது.

Also read: News18 Impact: ரேஷன் கார்டு தரவுகள் திருட்டு... தனிப்படை அமைத்து அரசு விசாரணை

இதையடுத்து, தலைமறைவாக உள்ள பிரபு மற்றும் தயாளன் ஆகியோரை ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

செய்தியாளர் - M.வெங்கடேசன்

First published:

Tags: AIADMK, Ambur, Congress