சேமியா ஃபிரை கேட்டு தனியா் உணவகத்தில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்... சிசிடிவி காட்சி வெளியீடு...

Youtube Video

ஆம்பூரில் சேமியா ஃப்ரை தொடர்பான தகராறில், உணவக உரிமையாளர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது சர்தார் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அங்கு சென்ற அதிமுக 36வது வார்டு கிளை செயலாளர் தயாளன், காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் பிரபு ஆகியோர் சேமியா ஃபிரை கேட்டுள்ளனர். ஆனால் சேமியா ஃப்ரை மாலையில்தான் கிடைக்கும் என சர்தார் தெரிவித்ததால் தகராறில் ஈடுபட்ட இருவரும், அவரை தாக்கினர். மேலும் உணவகத்தில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... வந்தவாசி குழந்தை விற்பனை: காதலன் மீது புகார் அளித்த காதலியும் சிக்கினார்

  சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: