ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு உத்தரவை மீறி வழிபாட்டு தலங்கள் செயல்பட்டால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - எஸ்.பி., விஜயகுமார் எச்சரிக்கை

அரசு உத்தரவை மீறி வழிபாட்டு தலங்கள் செயல்பட்டால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - எஸ்.பி., விஜயகுமார் எச்சரிக்கை

காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

அரசின் உத்தரவை மீறி வழிபாட்டு தலங்கள் செயல்பட்டால் சம்மந்தப்பட்ட வழிபாட்டு தல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அரசின் உத்தரவை மீறி வழிபாட்டு தலங்கள் செயல்பட்டால் சம்மந்தப்பட்ட வழிபாட்டு தல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் குமார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் சுட்டறு வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது ஜப்ரபாத் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இசுலாமியர்கள் தொழுகை நடத்தி கொண்டு இருந்தனர். இதனை கண்ட போலீசார் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு நேற்று இரவு அனைத்து வழிபாடு தளங்கள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நீங்கள் எப்படி தொழுகை நடத்தி கொண்டு இருக்கின்றீர்கள் என்றார்.

  அதற்கு ஜமாத் நிர்வாகிகள் இத்தகவல் குறித்து எங்களுக்கு தெரியவில்லை. ஆகையால் தொழுகை முடிந்தவுடன் அடுத்த மறு உத்தரவு வரும் வரை பள்ளிவாசல்களில் கூட்டாக தொழுகை நடத்த மாட்டோம் என்றனர். இதனை தொடர்ந்து தொழுகைக்கு வந்த பல இசுலாமியர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

  இதையடுத்து, அரசின் உத்தரவை மீறி வழிபாட்டு தலங்கள் செயல்பட்டால் சமந்தப்பட்ட வழிபாட்டு தலம் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

  செய்தியாளர் - M.வெங்கடேசன்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Corona, Lockdown, Tirupattur