125 ஆண்டு கால வாணியம்பாடி நகர மன்ற வரலாற்றில் 17வது நகரமன்ற தலைவராக முதன்முறையாக இந்து மதத்தை சேர்ந்த உமாபாய் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி நகரம் தமிழ்நாட்டிலேயே சிறந்த வசீகரமான நகரமாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா பாய் நகர மன்ற தலைவராக போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நகரமன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் உமாபாய் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் அப்துல்லா நகரமன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பை தொடர்ந்து, பேசிய நகர மன்றத் தலைவர் உமாபாய், வாணியம்பாடி நகரம் தமிழ்நாட்டிலேயே சிறந்த வசீகரமான நகரமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். நகர்மன்ற தலைவருக்கு அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க -
திமுகவில் காணாமல் போகும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.. தலைமையில் அறிவிப்பை மீறி கூட்டணிக் கட்சியினர் இடங்களில் போட்டி
125 ஆண்டு கால வாணியம்பாடி நகர மன்ற வரலாற்றில் 17வது நகரமன்ற தலைவராக முதன்முறையாக இந்து மதத்தை சேர்ந்த பெண் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: M.வெங்கடேசன்
திருப்பத்தூர் மாவட்டம்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.