புதுக்கோட்டையில் 11 வயது சிறுமி, திருப்பத்தூரில் 6 வயது சிறுவன் - விபத்தில் பறிபோன இரண்டு உயிர்கள்

Youtube Video

 • Share this:
  புதுக்கோட்டையில் 11 வயது சிறுமி நீர்நிலையில் தவறி விழுந்தும், திருப்பத்தூரில் 6 வயது சிறுவன் பாறையில் மோதியும் உயிரிழந்தனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியைச் சேர்ந்த கிராம உதவியாளர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் 11 வயது சிறுமி காயத்ரி. இவர் கொப்பனாபட்டியில் உள்ள ஊருணிகரையில் தனது பாட்டியுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அருகில் உள்ள கோவில் குளத்தில் தோழியுடன் தண்ணீர் எடுக்கச் சென்றவர் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.

  இதைப் பார்த்து உடன் சென்ற சிறுமி கத்தியுள்ளார். அதில் அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்க முயற்சித்துள்ளனர். மீட்க முடியாததால் தீயணைப்புத்துறையினரை வர வைத்து சிறுமியை மீட்டுள்ளனர். வெங்கலமேடு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதல் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  ALSO READ : பிற உயிர்களிடம் அன்பு செலுத்தும் போக்குவரத்து காவலர்.. பலர் பாராட்ட அப்படி என்ன செய்தார்?

  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 30 நிமிடத்திற்கு முன்பே சிறுமி இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் மருத்துமனைக்கு சென்று விசாரித்தனர். உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் மற்றும் போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.

  சிறுமியின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மருத்துவர்களும் உடற்கூறு ஆய்வு செய்யாமல் பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. மர வேலை செய்து வருகிறார்.

  இவருக்கு 6 வயது நிதிஷ் மற்றும் 5 வயதில் லோகேஷ் என்ற இரு மகன்கள் இருந்தனர். சிறுவர்கள் வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே உள்ள கதவாளம் மலைப்பகுதிக்கு சென்று விளையாடி கொண்டிருந்தனர். திடீரென இருவரும் தவறி பாறை மீது சரிந்து விழுந்துள்ளனர்.

  அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சத்தம்போட, அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். அதில் நிதிஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரரான லோகேஷ் படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செயது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: