திருப்பத்தூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏஸ் வாகனம் மூலம் சென்றனர். அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
விபத்தின்போது படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராம காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Also read... தூக்க கலக்கத்தில் 2-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த வடமாநில இளைஞர் - போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
மேலும் படுகாயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி ஜெயப்பிரியா(16) மற்றும் சின்னதிக்கி(35) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், செம்பரை கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்து, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாக மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,
தெரிவித்துள்ளார்.
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) April 2, 2022
இந்த விபத்து சம்பவத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், அவர்களது ஆன்மா எல்லாம்வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் வேண்டுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் விபத்து சம்பவத்திற்கு ஆளுநரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், செம்பரை கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்து, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி,தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupattur