ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடைமழை பெய்தாலும் திருப்பதியில் குறையாத கூட்டம்.. 40 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

அடைமழை பெய்தாலும் திருப்பதியில் குறையாத கூட்டம்.. 40 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி

திருப்பதி

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த மூன்று நாட்களாக விடாது பெய்யும் அடை மழையையும் பொருட்படுத்தாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி இலவச தரிசனத்திற்காக 40 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள்,இலவச தரிசனத்திற்காக டோக்கன்களை வாங்கிய பக்தர்கள் ஆகிய பக்தர்கள் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். ஆனால் திருப்பதிக்கு வந்து இலவச தரிசன டோக்கன் கிடைக்காமல் திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டப வழியாக செல்லும் பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபடலாம் என்ற நிலை தற்போது நிலவுகிறது.

  இதையும் படிங்க: காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ.. இளைஞரின் கொடூர செயல் - ம.பி-யில் அதிர்ச்சி

  பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக பக்தர்கள் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நிலவுகிறது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Tirumala Tirupati