Home /News /tamil-nadu /

ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன் புக்கிங் 2 நாட்களில் ஆரம்பம்... பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன் புக்கிங் 2 நாட்களில் ஆரம்பம்... பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

திருப்பதி

திருப்பதி

இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன் புக்கிங் 2 நாட்களில் ஆரம்பம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட வாசல் திறப்பதையொட்டி பக்தர்களின் வருகைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டோக்கன்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க : திருப்பதி செல்வோருக்கு தித்திப்பான செய்தி.. பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு

    இலவச தரிசன டோக்கன்கள் தேவையான பக்தர்கள் 27ஆம் தேதி காலை 9 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க : டிசம்பர் மாதம் திருப்பதி போறீங்களா.. இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும்.

    இதையும் படிங்க : திருப்பதி செல்ல இந்த சர்டிபிகேட் அவசியம் : தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

    எனவே அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி