சென்னையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் - திருப்பதி கோவிலுக்கு சொந்தமானது என தேவஸ்தானம் விளக்கம்

சென்னை பஞ்சாப் நேசனல் வங்கியில் 1381 கிலோ தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

Vijay R | news18
Updated: April 17, 2019, 10:55 PM IST
சென்னையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் - திருப்பதி கோவிலுக்கு சொந்தமானது என தேவஸ்தானம் விளக்கம்
தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டி
Vijay R | news18
Updated: April 17, 2019, 10:55 PM IST
சென்னையில் வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 1381 கிலோ தங்கம் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமானது என்று திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாரியில் நடத்திய சோதனையில் 1381 கிலோ தங்கம் இருந்துள்ளது.

அதுதொடர்பாக, வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கொடுத்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. அதனையடுத்து, வேனுடன் சேர்த்து 1381 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் பிடிப்பட்ட தங்கம் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமானது என்று திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. சென்னை பஞ்சாப் நேசனல் வங்கியில் 1381 கிலோ தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. 20 நாட்களுக்கு முன்பு தான் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதையடுத்து,  தங்க நகைகள் சாலை மார்க்கமாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான போர்டு கருவூலத்திற்கு 5 லாரிகளில் எடுத்து வரப்பட்டது.

அப்போது சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகள் லாரியை மடக்கி சோதனை செய்துள்ளனர். சோதனையில் தங்க நகைகள் சிக்கியுள்ளதால் தேவஸ்தான அதிகாரிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படை அதிகாரிகள் இடம் ஆவணத்தை காட்டி தங்கத்தை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Loading...

Also Watch: எல்லாரும் வாங்கிட்டாங்க! எங்களுக்கு பணம் கிடைக்கல - தூத்துக்குடி வாக்காளர்

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...