• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெல்லையில் போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை.. தாக்கி, தகாத வார்த்தைகளில் பேசியது காரணமா?

நெல்லையில் போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை.. தாக்கி, தகாத வார்த்தைகளில் பேசியது காரணமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே போலீசார் தாக்கியதால் பெண் தீக்குளித்து இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    நெல்லையில் சுத்தமல்லியை அடுத்த சத்யா நகர் பகுதியில் வாழ்ந்து வந்த சகுந்தலா என்ற பெண்ணுக்கு அபிராமி, பிரசாந்த், பிரதீப் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். அபிராமிக்கு திருமணமாகி கரூரில் வசித்து வரும் நிலையில், பிரசாந்த், பிரதீப் ஆகிய இருவரும் அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். பிரதீப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு விசாரணை என்ற பெயரில் பிரதீப்பை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அதிகாலை நேரத்தில் வந்த போலீசார் பிரதீப்பின் அண்ணன் பிரசாந்த்தையும் அழைத்து செல்ல முயற்சித்துள்ளனர்.

    இதற்கு வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத பிரசாந்தை ஏன் அழைத்து செல்கிறீர்கள் என கேட்டு சகுந்தலா வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த காவல் ஆய்வாளர் குமாரி சித்ரா உள்ள்ளிட்ட போலீசார் சகுந்தலாவை தாக்கி, தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க..Gold Rate | இந்த வாரத்தில் 2-வது நாளாக இன்றும் சரிந்த தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?



    இதனால் மனமுடைந்த சகுந்தலா போலீசார் முன்னிலையிலேயே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். தகவலறிந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சுத்தமல்லி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார். இதனை அடுத்து பேசிய அவர் பிரதீப்பை கைது செய்யவும், திருடப்பட்ட பொருளை மீட்கவும் போலீசார் சென்றதாகவும், அப்போது சகுந்தலா தீக்குளித்ததாகவும் கூறினார்.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: