அரசு மருத்துவமனைகளில் 2345 செவிலியர் பணியிடங்கள்... விண்ணப்பிக்க அழைப்பு...!

100 மதிப்பெண் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 30 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாகவும், இதர பிரிவினருக்கு 35 மதிப்பெண்ணும் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 2345 செவிலியர் பணியிடங்கள்... விண்ணப்பிக்க அழைப்பு...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 19, 2019, 1:31 AM IST
  • Share this:
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் 2345 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கான பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.

இந்நிலையில், 2345 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துப பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.


வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு இன்று முதல் www.mrb.tn.gov.in என்கிற ஆன்லைன் தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இம்மாதம் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய 5 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.

100 மதிப்பெண் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 30 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாகவும், இதர பிரிவினருக்கு 35 மதிப்பெண்ணும் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பக்கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை கீழே தெரிந்து கொள்ளலாம்...Also See...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading