நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கே தண்ணீர் இல்லை!

கதிர் விட்ட நெற்பயிர்களை மேற்கொண்டு பராமரிக்க நீர் இல்லாததால் கால்நடை மேய்ச்சலுக்கு விடும் சூழல் உருவாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கே தண்ணீர் இல்லை!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:56 PM IST
  • Share this:
நெல்லை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வற்றியுள்ளதால் நூறு ஏக்கர் பரப்பிலான நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

தாமிரபரணி மற்றும் சிற்றாற்றின் 11 அணைகள் மற்றும் 2,518 பாசனக்குளங்கள் மூலமாக நெல்லை மாவட்டத்திற்கு பாசன வசதி கிடைக்கிறது. ஆனால் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் நிலைமை தலைகீழாக உள்ளது.

மானூர் முதல் சங்கரன் கோவில் வரை   1,500-க்கும் மேற்பட்ட குளங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இன்றி வறட்சியின் பிடியில் உள்ளன. வறட்சி நிலையை அதிகாரிகள் மறைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


பருவமழையை நம்பி நெல்லை பயிர்செய்ததாக கூறும் விவசாயிகள் தற்போது கதிர்பிடிக்கும் நேரத்தில் சொட்டு நீரும் இன்றி நிலங்கள் பாளம், பாளமாக வெடித்திருப்பதால் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயப் பணிகள் இல்லாததால் அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் குளங்களை தூர்வாரும் பணிக்கு ஏராளமான விவசாயிகள் சென்றுவிட்டனர்.

இந்த சூழலில் கதிர்விடும் பருவத்திற்கு வளர்ந்த பயிர்களை மேற்கொண்டு பராமரிக்க முடியாததால், அறுவடைக்கு வழியின்றி கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் நிலை உருவாகியுள்ளது.கோடையில் கால்நடைகளை பராமரிப்பது குறித்த அச்சம் தற்போதே விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது.  மானூர் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறட்சியால் கடந்த சில ஆண்டுகளில் பலநூறு ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Also see...

First published: February 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading