தயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த ஓட்டலுக்கு ₹15,000 அபராதம்!

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹோட்டல் நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயை மகாராஜாவுக்கு ஒரு மாதத்தில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 10, 2019, 11:54 AM IST
தயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த ஓட்டலுக்கு ₹15,000 அபராதம்!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 10, 2019, 11:54 AM IST
தயிருக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலித்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு நெல்லை நீதிமன்றம் ₹15,000  அபராதம்  விதித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையத்து அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள அன்னப்பூரணா ஹோட்டலில் 40 ரூபாய்க்கு தயிர் வாங்கியுள்ளார்.

இதற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக 2 ரூபாய், பார்சல் செய்ய 2 ரூபாய் என 4 ரூபாய் சேர்த்து 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தயிர், பச்சை பால், பச்சை மாமிசம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிக்குள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயிருக்கு ஜிஎஸ்டி வரி வசூலித்ததால் அதிர்ச்சியடைந்த மகாராஜா நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகாராஜா


வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓட்டல் நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயை மகாராஜாவுக்கு ஒரு மாதத்தில் தர வேண்டும் எனவும், தவறினால் 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...