இந்திய அரசு நிறுவனமான BSNL தொலைத்தொடா்பு நிறுவனம் நாடு முழுவதும் சிறப்பாக இயங்கி வந்தது. நாட்டின் எந்த மூலைக்கும் ஒரு ரூபாயில் பேசும் வசதி போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்த அந்நிறுவனம், இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சொந்தக் கட்டடத்திலேயே இயங்கி வந்தது.
தொலைத்தொடா்புத் துறையில் ஏற்பட்ட ஊழல், பல்கிப் பெருகிய தனியார் நிறுவனங்களுடனான போட்டி போன்றவற்றால் அந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்த காரணத்தால் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் (VRS) அறிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை BSNL நிர்வாகம் பொதுமேலாளா் தலைமையில் இயங்கி வந்தது. வண்ணாரப்பேட்டையில் நெல்லையின் உயரமான கட்டடம் என்ற பெருமையுடன் 1,000 தொழிலாளா்களுடன் அது இயங்கியது. மாநகரப் பகுதியில் மட்டும் 65,000க்கும் மேற்பட்ட தரை வழி இணைப்புகள், மாவட்டத்தில் 1.5 லட்சம் தரை வழி இணைப்புகள், 2 லட்சம் செல்போன் இணைப்புகள் என சிறப்பாக இயங்கி வந்தது.
Also read: வாடகை வாகனங்களுக்கான வரியை உடனடியாக செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது கொடுங்கோன்மையின் உச்சம் - சீமான் காட்டம்
ஆனால், தற்போதய நிலையோ மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது. 7 மாடியில் 1,000 போ் பணியாற்றிய அலுவலகத்தில் தற்போது 50 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதிலும் தற்போது 10,000க்கும் குறைவாகவே தரை வழி இணைப்புகள் உள்ளன. நெல்லை அலுவலகம் நாகா்கோவில் பொதுமேலாளா் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது.
செல்போன் இணைப்புகளும் பெரிய வளர்ச்சியில் இல்லை என்று கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிகளுக்கு ஊழியர்கள் இல்லாததால் நிர்வாகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தனியார் மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7 மாடி கட்டடத்தில் மிகச் சிறப்பாக இயங்கிய நிறுவனம் கட்டடத்தை வாடகை்கு விடும் பரிதாபகரமான நிலைக்கு மாறியிருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.