புழுதி பறக்கும் நெல்லையின் பிரதான சாலை... சாகச பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள்...!

”சாலைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளித்து குறைந்த பட்சம் புழுதிபறக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை”

புழுதி பறக்கும் நெல்லையின் பிரதான சாலை... சாகச பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள்...!
”சாலைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளித்து குறைந்த பட்சம் புழுதிபறக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை”
  • Share this:
நெல்லையில் புழுதி பறக்கும் சாலைகளில் நாள்தோறும் 20 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. 

நெல்லை மாநகரின் பிரதான சாலையான சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை நெல்லை சந்திப்போடு குற்றாலம் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையை இணைக்கிறது.

நகரின் பிரதான சாலையான இதில் நாள்தோறும் 20 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் இருக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கும். இந்த நிலையில் மாநகர குடிநீர் திட்டப்பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது.
இரவில் மட்டும் 50 மீட்டர் தூரம் மட்டுமே தோண்டி  குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. காலையில் இயக்கப்படும் கனரக  வாகனங்களின் டயர்கள் மண் போட்டு மூடிய குழியில் புதைந்து எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் மணிக்கணக்கில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது  தார்சாலை உடைக்கப்படுவதால்  குண்டும் குழியுமாக இருப்பதுடன் புழுதி பறக்கும் நிலை உள்ளது. முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள்  சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.

வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வரும் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. உறங்கும் மாநகராட்சி நிர்வாகம் விழித்தெழுந்து குடிநீர் குழாய் பணிகளை முடித்து சாலைகளை செப்பனிட்டு சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும்.

அதுவரை சாலைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளித்து குறைந்த பட்சம்   புழுதிபறக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Also see...
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading