நெல்லை குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்து நடைப்பெற்ற இடத்தில் இருந்து இருவர் மீட்கப்பட்டநிலையில், 4 பேரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் நெல்லைக்கு விரைந்துள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், 300 அடி பள்ளத்தில் (முருகன், விஜய் , செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார்) 6 பேர் சிக்கிக் கொண்டனர். அதில் இருவர் (முருகன், விஜய் )ஆகியோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு பேரை மீட்க மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
Read More : மணமேடையில் நடனமாடி திருமணம் முடிந்த கையுடன் மணப்பெண் தற்கொலை
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தால் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 300 அடி ஆழத்தில் காற்றோட்டம் இல்லாத பகுதியில் ஹெலிகாப்டர் இறங்க முடியாது என்பதால் குவாரி மீட்பு பணியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இருந்தபோதிலும் தொடர் போராட்டங்களுக்கு பின்னர் இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் நால்வரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Thirunelveli