திருடர்களை ஓடஓட விரட்டிய வீரத்தம்பதிக்கு மாநில அரசின் ‘வீரதீர விருது’!

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் என்று பலரும் முதிய தம்பதியை பாராட்டினர்.

news18
Updated: August 14, 2019, 11:33 AM IST
திருடர்களை ஓடஓட விரட்டிய வீரத்தம்பதிக்கு மாநில அரசின் ‘வீரதீர விருது’!
நெல்லை தம்பதி
news18
Updated: August 14, 2019, 11:33 AM IST
நெல்லையில் திருட வந்தவர்களை கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு அடித்துவிரட்டிய தம்பதிக்கு, மாநில அரசின் வீரதீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை என்ற முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருவதால், இருவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் இவர்கள் வீட்டில் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி செந்தாமரை ஓடி வந்துள்ளார். சற்றும் யோசிக்காமல் கையில் கிடைத்த செருப்பு, சேர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொள்ளையடிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டினர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதும் வயதான தம்பதியின் வீரத்தை பார்த்து அனைவரும் பாராட்டி வந்தனர்.

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் என்று பலரும் பாராட்டினர். மாவட்ட எஸ்.பி நேரில் சென்று இருவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வீர தீர செயலுக்காக மாநில அரசு விருது வழங்கிவரும் நிலையில், இந்தாண்டு விருதுக்கு இருவரையும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை சுதந்திர தினத்தில் அவர்களுக்கு முதல்வர் விருது வழங்குவார் என்று கூறப்படுகிறது. அம்பாசமுத்திரம் தாசில்தார் இருவரையும் சென்னை அழைத்துச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...