ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு முழுவதும் அதிரடி... ஆபத்தான பள்ளி கட்டடங்களை கண்டறியும் பணி தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் அதிரடி... ஆபத்தான பள்ளி கட்டடங்களை கண்டறியும் பணி தொடக்கம்

நெல்லை பள்ளி விபத்து

நெல்லை பள்ளி விபத்து

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், பழுதடைந்ததாக கூறப்படும் 73 பள்ளி கட்டடங்களை இடிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருநெல்வேலி பள்ளி விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் பயனற்ற பள்ளி கட்டடங்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது.

  திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கைதான பள்ளி தாளாளர் மற்றும் ஒப்பந்ததாரர் இருவரையும், 31ம் தேதி வரை ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்க குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார். பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த சாப்டர் பள்ளியில், கோட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி ஆகியோர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

  தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயனற்ற பள்ளி கட்டடங்களை அகற்றவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவின்பேரில், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதிலமடைந்து பயனற்ற நிலையில் இருந்த கட்டடத்தை அகற்றும் பணிகள் தொடங்கின.

  ALSO READ |  இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 126 ஆக அதிகரிப்பு...

  புதுக்கோட்டையில் 325 பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 கட்டடங்களை இடிக்கும் பணி திங்கட்கிழமை தொடங்கும் என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 120 வகுப்பறை கட்டடங்களையும், 80 கழிவறை கட்டடங்களையும் இடிக்க ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். அரியலூரில் சேதமடைந்த 38 பள்ளி மற்றும் கழிவறை கட்டடங்களை இடிக்க மாவட்ட கல்வித்துறை, ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளது. தஞ்சையில் 48 பள்ளிகளில், 96 கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான முறையில் இருப்பதாகவும், ஒரு வார காலத்திற்குள் இந்த கட்டடங்கள் இடிக்கப்படும் என்றும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

  வேலூரில் 163 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது. சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்படும் நிலையில், அங்கு பயின்று வரும் மாணவ, மாணவியர் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார். அனைத்து பள்ளிகளின் கட்டமைப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

  ALSO READ |  கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வெட்டிப் படுகொலை... பாஜக மீது குற்றச்சாட்டு

  இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், பழுதடைந்ததாக கூறப்படும் 73 பள்ளி கட்டடங்களை இடிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Accident, Buildings, Tirunelveli