Home /News /tamil-nadu /

காவல்துறையினருக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் காட்டம்

காவல்துறையினருக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் காட்டம்

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

காவல்துறையினருக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடப்பதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

    நெல்லை கல்லிடைகுறிச்சி கல்லாணை அணை பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்கக் கோரி சிவசங்கர் என்பவர் தொடர்ந்த மனு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், அதனை அதிகாரிகள் பின்பற்றுவது கிடையாது என அதிருப்தி தெரிவித்தது.



    Also read: போதைப் பொருள் குற்றச்சாட்டு: நிக்கி கல்ராணி சகோதரி வீட்டில் போலீசார் சோதனை

    மணல் கடத்தல் என்பது காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பது கிடையாது எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் நிலை குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், நெல்லை ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசராணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Sand mafia, Thirunelveli

    அடுத்த செய்தி