அப்பா - அம்மா சண்டையை தடுத்த சிறுமி... அடித்துக் கொன்ற அப்பா... நெல்லையில் பரபரப்பு

குழந்தையை கொன்ற தந்தையின் குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Desk | news18
Updated: July 10, 2019, 11:52 AM IST
அப்பா - அம்மா சண்டையை தடுத்த சிறுமி... அடித்துக் கொன்ற அப்பா... நெல்லையில் பரபரப்பு
தந்தை கைலாஷ் மற்றும் அவரது மகள்
Web Desk | news18
Updated: July 10, 2019, 11:52 AM IST
நெல்லை அருகே கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறை விலக்கிவிடச் சென்ற 7 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கைலாஷ். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்த கைலாஷ், குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் குடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சண்டையை 7 வயது மகள் சுகிர்தா தடுக்க முயற்சித்தார். போதையில் இருந்த கைலாஷ் மகளையும் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துவிட்டார்.

குழந்தை மயங்கி விட்டதாக கருதிய பெற்றோர், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாகக் கூறி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களிடம் சிறுமி மாடியில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமியின் முகத்தில் காயமிருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் தந்தையே அடித்துக்கொன்றது தெரியவந்தது. கொலையை மறைப்பதற்கு தாயும் உடந்தையாக இருந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...