மகள்களுக்கு இல்லாமல் மகன்களுக்கு மட்டும் சொத்தைக் கொடுப்பதா? தகராற்றில் கணவரை எரித்துக்கொன்ற மனைவி!

இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகன்களுக்கு மட்டும் சொத்துக்களை எழுதி வைப்பதற்கு மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

news18
Updated: September 11, 2019, 1:06 PM IST
மகள்களுக்கு இல்லாமல் மகன்களுக்கு மட்டும் சொத்தைக் கொடுப்பதா? தகராற்றில் கணவரை எரித்துக்கொன்ற மனைவி!
மரியலீலா மற்றும் பாக்கியராஜ்
news18
Updated: September 11, 2019, 1:06 PM IST
பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து கணவரை எரித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். 10 ஆண்டுகளுக்கும் மேல் வெளிநாட்டில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து மனைவி மரியலீலா மற்றும் மகன், மகள்கள் நான்கு பேருடன் வசித்து வந்தார்.


மகன், மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார் பாக்கியராஜ்.

மூத்த மகன் வீடு கட்டுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதனால், சொத்தை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுப்பதற்கு முடிவு செய்தார். அதன்படி சொத்துக்களை பாகம் பிரிப்பதற்காக நிலத்தை அளவீடு செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகன்களுக்கு மட்டும் சொத்துக்களை எழுதி வைப்பதற்கு மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Loading...

மேலும் தனது பெயரில் சொத்தை மாற்றித் தருமாறும், தனக்குப் பிறகு சொத்துக்களை, பிள்ளைகள் எடுத்துக்கொள்ளட்டும் என மரிய லீலா கூறியுள்ளார்.

இதற்கு சம்மதிக்காத பாக்கியராஜ், சொத்தை இரு மகன்களுக்கு பிரித்துக்கொடுக்கும் பணியை மேற்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மரியலீலா கணவர் என்றும் பாராமல் தூங்கி கொண்டிருந்த பாக்கியராஜ் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

பாக்கியராஜின் அலறல் சத்தம் கேட்டு வந்த மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாக்கியராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு பாக்கியராஜின் மனைவி மரியலீலாவை கைது செய்தனர்.

Also see...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...