நெல்லை நுகர்போருள் வாணிப கழகத்திற்கு ஆந்திராவில் இருந்து அரிசி வந்துள்ளது. அதனை இறக்கும் பணியை பார்வையிட வந்த நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி மகேஸ்குமார், 9-ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஜானேஸ்வரனையும் அழைத்து வந்துள்ளார். மகேஸ்குமார் பணியில் மும்முரமாக இருந்த நிலையில் ஜானேஸ்வரன், அங்கிருந்த ரயில் எஞ்ஜின் மீது ஏறி செல்பி எடுத்துள்ளார்.
இதனை பார்த்த ஊழியர்கள் கண்டித்தும், ஜானேஸ்வரன் கேட்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், உயர் அழுத்த மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தார்.