நெல்லை தம்பதியிடம் கொள்ளைமுயற்சி: கைதான நபர் பற்றி அதிர்ச்சி தகவல்

News18 Tamil
Updated: October 5, 2019, 12:29 PM IST
நெல்லை தம்பதியிடம் கொள்ளைமுயற்சி: கைதான நபர் பற்றி அதிர்ச்சி தகவல்
நெல்லை தம்பதி
News18 Tamil
Updated: October 5, 2019, 12:29 PM IST
நெல்லையில் வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெருமாள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்யாணிபுரத்தில், பண்ணை வீட்டில் தங்கியிருந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை தாக்கி, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு, இரண்டு பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், இருவரையும் அவர்கள் வீரத்துடன் அடித்து விரட்டினர். இதில், பெருமாள் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கைதான பெருமாள் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தது தெரியவந்துள்ளது. மேலும், வழக்கை விசாரித்துவந்த காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமியின் நெருங்கிய உறவினர் பெருமாள் என்பதும் தெரியவந்துள்ளது.


இதுகுறித்து காவல்துறை உயரதிகாரதிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

First published: October 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...