ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள்...! அவதிப்படும் நெல்லை மக்கள்

கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள்...! அவதிப்படும் நெல்லை மக்கள்
News 18
  • Share this:
நெல்லை மாநகர பகுதியில் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு 230 கோடி மதிப்பில் முக்கூடல் அருகே உள்ள அரியநாகிபுரத்தில் உள்ள தாமிபரணி ஆற்றுப் பகுதியில் இருந்து மாநகரப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.

இந்தத் திட்டப்படி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கும் தினமும் 5 கோடி தண்ணீர் வழங்கபட இருக்கிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேட்டையில் இருந்து டவுண் வழுக்கோடை வரை குழாய் பதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் இரண்டு மாதங்களில் முடியும் நிலையில், திட்டமிட்டு கிடப்பில் போடபட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் மக்களின் பல்வேறு போராட்டங்களின் விளைவாக அப்பணி ஓராண்டிற்குப் பிறகு முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக டவுண் வழுக்கோடை பகுதியில் இருந்து நெல்லையப்பர் காட்சி மண்டபம் வரை குழாய் அமைக்கும் பணி நடைபெற துவங்கியது. இதில் முக்கியப் பகுதியான வழக்கோடை முக்கு வரையிலாக குழாய் பணி தொடங்கபட்டது. வெறும் 200 மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் இப்பகுதியில் பொது போக்குவரத்து இல்லாத நிலையிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


குழாய் பதிக்கும் பணியால் அவதிப்படும் மக்கள்.


குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காகத் தோண்டப்பட்டுள்ள குழிகள்.


கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியபோதும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகி வருகிறது.இந்த நிலையில், கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Also see:
First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading