நம்மால் பிறருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற கவலை - சோக முடிவை தேடிக்கொண்ட இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்

கொரோனா தொற்றால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நெல்லை இருட்டுக் கடை உரிமையாளர் ஹரி சிங் தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

நம்மால் பிறருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற கவலை - சோக முடிவை தேடிக்கொண்ட இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்
இருட்டுக் கடை உரிமையாளர் ஹரி சிங்.
  • Share this:
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண சிங், அவரது மகன் பிஜிலி சிங் உடன் இணைந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கீழரத வீதியில் அல்வா கடையைத் தொடங்கினார். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு உணவு சமைக்க வந்தபோது அல்வா செய்து கொடுத்துள்ளனர். அல்வாவின் ருசியில் மயங்கிய ஜமீன்தார் நெல்லையில் தங்கி கடை தொடங்கச் சொன்ன நிலையில் அல்வா கடை தொடங்கப்பட்டது.

முதலில் காண்டா விளக்கு கொண்டு கடை தொடங்கப்பட்டது. பின்னர் கடையில் ஒரு குண்டு பல்பு மட்டும் தொங்கவிடப்பட்டு வியாபாரம் நடைபெறும். இதனால் அது இருட்டுக் கடை  எனப் பெயர் பெற்றது. கடைக்கு பெயர் பலகை கிடையாது மாலை 5 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை நடைபெறும். அது சூடான அல்வா கிடையாது என்றாலும் அல்வாவின் சுவையால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டதால் நெல்லை அல்வா தமிழகம் தாண்டி பெருமை பெற்றது.

நெல்லை இருட்டுக்கடை.கிருஷ்ணசிங், பிஜிலி சிங் உயிரிழந்த நிலையில் அவர்களின் உறவினரான ஹரிசிங் கடந்த 40 ஆண்டுகளாக ஹரிசிங் கடையை நடத்தி வருகிறார். தற்போது வரை கடைக்கு பெயர் பலகை கிடையாது; கூடுதலாக 4 குண்டு பல்புகள் மட்டுமே போடப்பட்டிருக்கும். அதே பாரம்பரியத்துடன் கடையில் விற்பனை நடைபெறுகிறது மாலையில் அல்வா வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் கடை திறக்கும் முன்பே காத்திருப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் கூட இந்தக் கடைக்குச் சென்றிருந்தார்.

ஹரி சிங்குடன் மு.க. ஸ்டாலின்.


Also see:

கடையின் உரிமையாளர் ஹரி சிங் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரகத் தொற்று பிரச்னை காரணமாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றார். இந்நிலையில் அவரின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மருத்துவமனை அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தொற்று பரவலுக்குக் காரணமாகிவிட்டோம் என்ற எண்ணத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஹரிசிங் உயிரிழந்த சம்பவம் நெல்லை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading