நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலை
  • Share this:
திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு பணிப்பெண் ஆகிய மூவர் படுகொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் , ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 6 மணியளவில், தனது கணவருடன் வீட்டில் இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த ஒரு  கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.


இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்