சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: 4 பேர் மீது வழக்குப்பதிவு: கைதான இருவர்.. ஒருவரிடம் விசாரணை: சிக்காமல் இருக்கும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..

சாத்தான்குளிம் வழக்கில் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு. அதில் எஸ்.ஐ ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் கைது. காவலர் முத்துராஜாவிடம் விசாரணை. எஸ்.ஐ பாலகிருஷ்ணன் இன்னும் சிக்கவில்லை.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: 4 பேர் மீது வழக்குப்பதிவு: கைதான இருவர்.. ஒருவரிடம் விசாரணை: சிக்காமல் இருக்கும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்தவிவகாரம் தேசிய அளவில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ தொடங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனையடுத்து, இன்று சிபி.சி.ஐ.டி காவல்துறை விசாரணையைத் தொடக்கியது. இன்று, 12 குழுக்களாக பிரிந்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் பல தடயங்கள் கிடைத்தன. குறிப்பாக, ஜெயராஜ், பென்னிக்ஸை கடுமையாகத் தாக்கிய பிறகு ரத்தம் வடிய வடிய சிகிச்சையளிக்காமல் 110 கி.மீ தூரத்துக்கு காரில் அழைத்துச் சென்று சிறையில் அடைத்து விவரங்கள் தெரியவந்தன.

இந்தநிலையில், அனைத்து தரப்பும் வலியுறுத்த கொலைவழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக முக்கியமாக குற்றச்சாட்டப்பட்ட எஸ்.ஐ ரகுகணேஷை சி.பி.சி.ஐ.டி காவல்துறை கைது செய்துள்ளது. இவர்தான், இருவரையும் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், சாத்தான்குளிம் வழக்கில் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு. அதில் எஸ்.ஐ ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் கைது. காவலர் முத்துராஜாவிடம் விசாரணை. எஸ்.ஐ பாலகிருஷ்ணன் இன்னும் சிக்கவில்லை.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading