விவசாய மக்கள் அதிகம் நிறைந்த மக்களவைத் தொகுதியாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி விளங்குகிறது.
1951-ம் ஆண்டு துவங்கப்பட்ட திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகள் மாறி மாறி கைப்பற்றி வந்தன. அ.தி.மு.க 7 முறையும் காங்கிரஸ் கட்சி 5 முறையும் இங்கு வெற்றியைப் பதிவு செய்தன.
2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பிரபாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் சி. தேவதாசசுந்தரம் 2,72,040 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட சிவனணைந்த பெருமாள் 1,27,370 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் ராமசுப்பு 62,863 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர். 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 66.16% வாக்குகளும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.2% அதிகரித்து 67.68% வாக்குகளும் பதிவாகின.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.