உரிமையாளர் மரணத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை - பொறுப்பை கையில் எடுத்த நான்காம் தலைமுறை

கொரோனாவால் உரிமையாளர் தற்கொலை செய்த நிலையில், நெல்லை இருட்டுக்கடை 20 நாட்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளது

உரிமையாளர் மரணத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை - பொறுப்பை கையில் எடுத்த நான்காம் தலைமுறை
இருட்டுக்கடை
  • News18
  • Last Updated: July 15, 2020, 7:57 AM IST
  • Share this:
திருநெல்வேலி அல்வா உலக புகழ் பெற காரணமாக இருந்த நெல்லை இருட்டுகடை அல்வா உரிமையாளா் ஹரிசிங் கொரோனா காரணமாக உயிரை மாய்த்து கொள்ள, கடை 20 தினங்களாக பூட்டப்பட்டிருந்தது.

புகழ்பெற்ற அல்வாவை நெல்லை மக்கள் மறந்துவிட வேண்டியது தானா? என எண்ணியிருந்த வேளையில் நான்காம் தலைமுறை வாரிசான சூரத்சிங் கடையை இன்று முதல் திறந்து வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

1930 ம் ஆண்டுகளில் பிஜிலிசிங் என்பவரால் சுவாமி நெல்லையப்பர் ஆலயம் எதிரே அந்திவேளையில் மட்டும் செயல்படும் வகையில்  காண்டா விளக்கு ஒளியில் அல்வா வியாபாரம் தொடங்கப்பட்டது. அவரை தொடா்ந்து அவரது மகன் கிருஷ்ணசிங், அவரது மகன் ஹரிசிங் என மூன்று தலைமுறையினர் கடையை நடத்தி வந்தனா்.


கடை திறக்கப்பட்டு 90 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அதே பாரம்பரியப்படி தற்போதும் மாலை நேரத்தில் மட்டுமே கடை திறக்கப்படும். கடைக்கு போர்டு கிடையாது; இருட்டுகடை என்ற பெயருக்கு ஏற்ப குண்டு பல்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே பழமை மாறாத நிலையில் ஹரிசிங்கின் உயிரிழப்பிற்கு பிறகு அவரது பேரன் சூரத்சிங் கடையை தற்போது திறந்து வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
படிக்க: தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்புபடிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
கொரோனா காலமான தற்போது அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதோடு, அதே தரத்துடன் அல்வா விற்பனை செய்யப்படும் என சூரத்சிங் தெரிவிக்கிறார். ஊரடங்கால் மக்கள் வெளியூர்களில் இருந்து வருவதற்கு இல்லாததாலும் கடை திறப்பு குறித்த தகவல் தெரியாததாலும் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது    .

கடந்த மூன்று தலைமுறையினர் தொழிலில் தந்தையோடு செயல்பட்டு அவரது மறைவிற்கு பின்னர் தொழிலை தொடர்நது நடத்தினர். ஆனால் இவர் தொழிலுக்கு புதியவர் திருநெல்வேலி அல்வாவிற்கு உலக அரங்கில் இருக்கும் பெயரை தக்க வைத்து கொள்வாரா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading