பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் களைகட்டும் ஆட்டுச்சந்தை!

இன்று பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் சந்தையில் 2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

news18
Updated: August 6, 2019, 1:15 PM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் களைகட்டும் ஆட்டுச்சந்தை!
மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை
news18
Updated: August 6, 2019, 1:15 PM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் நடத்தபடும் ஆட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும்.

திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, இன்றைய ஆட்டு சந்தையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஆடு வியாபாரிகளும் வந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.


மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை


இதனால், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு ஆடு 7 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மழை இல்லாததாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் வரத்து குறைவாக இருப்பதாவும், விலை அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Loading...

இன்று பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் சந்தையில் 2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...