சதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது!

மண்ணுளிப் பாம்பின் வாலும் தலையைப் போல் இருப்பதால் இருதலை மணியன் என்று குறிப்பிடப்படுகிறது.

Web Desk | news18
Updated: May 21, 2019, 11:16 AM IST
சதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது!
மண்ணுளிப் பாம்பு
Web Desk | news18
Updated: May 21, 2019, 11:16 AM IST
நெல்லை மாவட்டம் தென்காசியில் மண்ணுளிப் பாம்பை 15 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக விடுதி உரிமையாளர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சதுரங்க வேட்டை படத்தில் நாயகன் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவார். அதில் ஒன்றுதான் மண்ணுளிப் பாம்பு மோசடி. அதை வீட்டில் வைத்திருந்தாலே கோடி கோடியாக கொட்டும் என்பார் நாயகன். உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம், நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது.

சனிக்கிழமை இரவு குற்றாலத்தில் உள்ள விடுதிகளில் தங்கக் கடத்தல் நடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஒவ்வொரு விடுதியாக சோதனையிட்டு வந்தனர், அப்போது தங்கப்பாண்டியன் விடுதியில் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அறையை சோதனையிட்ட போது ஒரு பையில் மண்ணுளிப் பாம்பு இருந்தது தெரியவந்தது.

மண்ணுளிப் பாம்பு


விடுதி உரிமையாளர் தங்கப்பாண்டியன், நேபாளத்தைச் சேர்ந்த சங்கர், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஐசக் மேத்யூ, சென்னையைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் ஆகிய நான்கு பேரிடமும் போலீசாரும் வனத்துறையினரும் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின

மண்ணுளிப் பாம்பு விற்பனை-சிக்கிய கும்பல்
Loading...
நேபாளத்தைச் சேர்ந்த சங்கர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா கம்மம் பகுதியில் மண்ணுளிப் பாம்பு ஒன்றை 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த மண்ணுளிப் பாம்பை 15 லட்சம் ரூபாய் விற்பனை செய்ய சங்கர் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து அவர் வாட்ஸப் குழு ஒன்றை இதற்காக தனிப்பட்ட முறையில் உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவில் குற்றாலம் விடுதி உரிமையாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் இணைந்தனர்.

சங்கர், ஒரு பையில் நவதானியங்களைப் போட்டு அதில் மண்ணுளிப் பாம்பை வைத்திருந்தார். பின்பு தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து முக்கிய புள்ளிகளுக்கு பாம்பைக் காட்டியுள்ளார். மண்ணுளிப் பாம்பை வீட்டில் வைத்திருந்தாலே கோடி கோடியாக பணம் கொட்டும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

மண்ணுளிப் பாம்பு


மண்ணுளிப் பாம்பு இருக்கும் வீட்டில், உறவுகளுக்குள் சிக்கல் வராது, குடும்பம் இனிமையாக மாறி விடும் என்றெல்லாம் சங்கர் பில்டப் கொடுத்துள்ளார்.

வேறு எங்கும் விற்பனை செய்ய முடியாத நிலையில் இறுதியாக சுற்றுலா தலமான குற்றாலம் வந்து தங்கப்பாண்டியன் விடுதியில் சங்கர் தங்கியுள்ளார்.

தற்போது கோடைக்காலம் என்பதால் குற்றாலத்திற்கு விஐபிகள் வந்து செல்வார்கள் என்ற அடிப்படையில் சங்கர் அங்கு முகாம் அமைத்துள்ளார்.

விடுதியில் நண்பர்களுடன் இணைந்து பாம்பை விற்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில் 4 பேரும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

கைதான 4 பேர்


இந்தக் கும்பலிடம் மண்ணுளிப் பாம்பை வாங்குவதற்கு முயன்ற முக்கியப் புள்ளி யார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்

மண்ணுளிப் பாம்பின் வாலும் தலையைப் போல் இருப்பதால் இருதலை மணியன் என்று குறிப்பிடப்படும். இந்த பாம்பில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தயாரிக்க முடியும் என்ற மூடநம்பிக்கை நிலவுவதால் தெற்காசிய நாடுகளில் இந்த பாம்பு அதிகளவில் வேட்டையாடப்படுகிறது.

குற்றாலத்தில் 4 பேர் கும்பலிடம் இருந்து மண்ணுளிப் பாம்பை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also see... கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் அரிவாள் வெட்டு! ஒரு கிராமத்தினர் மீது மற்றொரு கிராமத்தினர் கொடூர தாக்குதல்

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...