ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோயில் மணி அடித்து அம்மனை வழிபடும் அதிசய ஆடு! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கோயில் மணி அடித்து அம்மனை வழிபடும் அதிசய ஆடு! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : கோயில் மணி கயிற்றால் தூணில் கட்டப்பட்டுள்ளது. ஆடு அந்த கயிற்றை கொம்பில் சுற்றி   காலால் ,இழுத்து மணியை அடிக்கிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ஆடு ஒன்று தனது கொம்பால் கயிறை சுற்றி கோயில் மணியை அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக  வைரலாகி வருகிறது

  திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். சிதம்பரம் தனது வீட்டில் 10 க்கும் மேற்பட்ட  ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மணியை அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  ' isDesktop="true" id="722520" youtubeid="io78jUlcXfk" category="tirunelveli-district">

  கோயில் மணி கயிற்றால் தூணில் கட்டப்பட்டுள்ளது. ஆடு அந்த கயிற்றை கொம்பில் சுற்றி காலால் இழுத்து மணியை அடிக்கிறது. தினமும் இது போல் ஆடு கோவில் வந்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை மணியை அடித்து செல்வதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து  பலர் வியப்பு அடைந்து வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.

  செய்தியாளர் : P.S. சிவமணி.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Tirunelveli, Viral Video