ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோடை மழைக்கே தேங்கும் தண்ணீர்... ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்து

கோடை மழைக்கே தேங்கும் தண்ணீர்... ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்து

கோடை மழைக்கே தேங்கும் தண்ணீர்

கோடை மழைக்கே தேங்கும் தண்ணீர்

Tirunelveli District | வள்ளியூர் பகுதியில்  மழை பெய்தால் இந்த சுரங்க பாதையில்  தண்ணீர்  தேங்குவதும் அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 10 கிலோ மீட்டர் சுற்றி செல்வதும் தண்ணீர் வடிந்த பின்னர் போக்குவரத்து தொடங்குவதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருநெல்வேலியில் புதிதாக திறந்த ரயில்வே பாலத்தில் கோடைமழைக்கு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையின் காரணமாக ரயில்வே சுரங்க பாதையில்  தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற மினி பேருந்து சுரங்க  பாதையில் இருந்த தண்ணீரில்  சிக்கிக்கொண்டது . பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் மற்றும் பயணிகள்  தண்ணீரில்  இறங்கி சென்றனர்.

மேலும் ஆபத்தை உணராமல் ஒரு சில ஓட்டுனர்கள் தொடர்ந்து சுரங்க பாதை  வழியே பயணம் செய்தனர். வள்ளியூர் பகுதியில்  மழை பெய்தால் இந்த சுரங்க பாதையில்  தண்ணீர்  தேங்குவதும் அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 10 கிலோ மீட்டர் சுற்றி செல்வதும்  தண்ணீர் வடிந்த பின்னர் போக்குவரத்து தொடங்குவதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்து

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், சுரங்கப் பாதைகளை ரயில்வே நிர்வாகம் அமைத்து கொடுத்தாலும் இதுபோன்று தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால் உள்ளாட்சி நிர்வாகங்களே தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனமாக செயல்படுவதால் தண்ணீர் தேங்குவது, அதில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

தேங்கி நிற்கும் தண்ணீர்

இனியாவது இது போன்று தண்ணீர் தேங்கினால் உடனடியாக அதனை மோட்டார் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Rain, Tirunelveli