தமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..

தண்ணீர் கேன்

தண்ணீர் எடுப்பது தாமிரபரணியில்.. சுத்திகரிப்பு செய்து கழிவுநீரை வெளியிடுவது திருநெல்வேலி மண்ணில்.. தமிழகத்தில் 20 ரூபாய் - கேரளாவில் 13 ரூபாய்.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..

 • Share this:
  திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அக்வாபினா மினரல் வாட்டர் தொழிற்சாலை அமைந்துள்ளது பத்தாண்டுகளாக இந்த ஆலை இங்கு செயல்பட்டு வரும் நிலையில் இதற்கு மூலப் பொருளான  தண்ணீர் தாமிரபரணியில் இருந்து வழங்க பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

  கம்யூனிஸ்ட் கட்சியினர், பல்வேறு தரப்பினர், மாணவர்கள்  என ஏராளமானவர்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தினர் எனினும் தாமிரபரணி ஆற்றிலிருந்து மிகக்குறைந்த விலையில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் 15 ரூபாய் என்ற விலையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலைக்கு தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றிலிருந்து வழங்கப்படுகிறது.

  பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் குறைந்து விவசாயத்திற்கே  தண்ணீர் வழங்கப்பட முடியாத  சூழல் ஏற்பட்ட  நேரத்திலும்  தாமிரபரணியில் தண்ணீர் குறைவாக ஓடும்  நேரத்திலும்கூட தினமும்  தண்ணீர் வழங்கப்பட்டது.  தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி பகுதியில் தனி உறை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து தனி பைப் லைன்கள் அமைத்து இந்த தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

  Also read: விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…

  கடந்த ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் உறைக்கிணறுகள் பைப் லைன்கள் முழுவதுமாக சேதமடைந்தன. மழை வெள்ளம் குறைந்த சில நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முன்னர்  முதன் முதலாக இந்தத் தனியார் குடிநீர் தொழிற்சாலைக்கு செல்லும் பைப் லைன்கள் தான் சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் இங்கு நாள்தோறும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடிநீர் கேன்கள் தயார் செய்யப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்டு  தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்திற்கும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது இதிலிருந்து வெளியாகும். கழிவு நீரும்  சிப்காட் வளாகத்திலேயே வெளியேற்றப்படுகிறது.

  Also Read:  மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திய பெற்றோர்!

  தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாக ஓடக்கூடிய தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுத்து அதனை சுத்திகரித்து அந்த தண்ணீரை வாரிக் கொடுக்கும் தமிழகத்திற்கு 20 ரூபாய்க்கும் இங்கிருந்து போக்குவரத்து மூலம் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 1 லிட்டர் தண்ணீர் 13 ரூபாய்க்கு இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. முழுவதும் தானியங்கி இயந்திரங்களில் தண்ணீர் தூய்மைப்படுத்தப்படுவதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இதில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

  தாமிரபரணியை சுரண்டி  கழிவு நீரை இங்கேயே விட்டு பூமியை பாழாக்கி பிழைப்பு நடத்தும் இந்த தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மனசாட்சியின்றி கூடுதல் விலைக்கு தமிழகத்தில் தண்ணீரை  விற்பது நியாயமா? தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழக அரசு சார்பில் அம்மா குடிநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது சாதனை என சொல்லிக்கொள்ளும் நிலையில் தமிழக அரசு தனியார் பாட்டில் குடிநீர் விலையை கேரள அரசு போல நிர்ணயிக்குமா தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் தனியார் தண்ணீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமா எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

  பி.எஸ்.சிவமணி. செய்தியாளர் - நெல்லை
  Published by:Arun
  First published: