தி.மு.க இளைஞரணி மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி
ஸ்டாலின்,
திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து
நெல்லை டவுன் வாகையடி முனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘பிரச்சரத்தில் ஆண்களோடு அதிகமான பெண்கள் வந்துள்ளதற்கு காரணம் 50% பெண் வேட்பாளர்கள் என்பதனால் தான்.
தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும். பா.ஜ.க இருக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்க போவதாக பேசுகிறார்
சட்டமன்றத்தை முடக்கி தேர்தல் வைத்தால் 200 இடங்களில் தி.மு.க மீண்டும் வெற்றி பெறும். கடந்த முறை ஏமாற்றியதைப் (நெல்லை தொகுதி பாஜக வெற்றி பெற்றதை குறித்து) போல் இந்த முறை ஏமாற்றமாட்டீங்க என நினைக்கிறேன். தி.மு.க பொறுப்பேற்ற பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வார்டுக்குள் சென்று சிகிச்சை குறித்து ஆய்வு செய்தது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும் தான்.
2024-ம் ஆண்டு ஒரே தேர்தலா? மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
ஆட்சி அமைந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் முதல் 3 மாதம் கொரனா நோய் தொற்றால் ஓடிவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் 5 லட்சம் கோடி வாங்கி கஜனாவை காலி செய்துவிட்டனர். கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என சொன்னதை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தந்தார்.
8 மாதத்தில் படிபடியாக அனைத்து திட்டங்களையும் தி.மு.க அரசு செய்து வருகிறது. சிலிண்டர் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை அனைத்தும் செய்வோம். பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் தி.மு.க சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவருகிறது’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.