Kuwait | குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற பெண்ணுக்கு சித்ரவதை... மீட்டுத்தரக்கோரி கணவர் கோரிக்கை

குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி அவரது கணவர் தனது உறவினர்கள் மற்றும் மகன்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

  • Share this:
    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி விமலா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்காக அவர்களது நெருங்கிய நண்பர்கள் மூலமாக சென்றுள்ளார். மாதம் ரூ.20000 சம்பளம் பேசி அவருக்கு கொடுத்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அவரிடமிருந்து எந்தவித தொடர்பும் இல்லை. இவர்கள் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போதும் இவர்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பயந்து போன அவர்கள் இதுகுறித்து தமிழக அரசுக்கும் தூதரகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனாலும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அதனைத் தொடர்ந்து அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது இரண்டு ஆண்டுகளாக எனக்கு மனைவி அங்கு வேலை செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் சம்பளம் அவர்களுக்கு மரியாதை கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது 6 மாத காலமாக அவருக்கு முறையான சம்பளம் கொடுக்கவில்லை. மேலும் அவர்களுக்கு சரியான உணவும் கொடுக்காமல் அவர்களை சித்திரவதை செய்து வந்துள்ளார்கள். உணவு கேட்டால் அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

    Also Read : முதல்கட்டமாக அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனே செயல்படுத்துக - அன்புமணி ராமதாஸ்
     இதுகுறித்து என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் தெரிவித்து என்னை எப்படியாவது அங்கிருந்து மீட்டு விடுங்கள் என்று கதறினார். நாங்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மூன்று மாதங்களாக என் மனைவியிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. அவர் நிலைமை என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை அவரை உடனடியாக மீட்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
    Published by:Vijay R
    First published: