முழு ஊரடங்கு; டாஸ்மாக் கடைகளுக்கு சீல்; பாதுகாப்பு கருதி இரும்பு கம்பிகள் கொண்டு வெல்டிங் வைப்பு!

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்

கடந்த ஊரடங்கின் போது பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நெல்லையில் அனைத்து அரசு மதுபானக்கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணம் கருதி கடைகளின் கதவுகள் பூட்ட பட்ட நிலையில் கதவுகளை திறக்க முடியாதபடி இரும்பு கம்பி கொண்டு வெல்டிங் செய்யப்பட்டது.

  நெல்லை தென்காசி மாவட்டங்களில் 165 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரடங்கு தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி நேற்றும் இன்றும் மாலை 6 மணி வரை மதுபானக்கடைகளில் விற்பனை நடைபெற்றது.

  இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் விற்பனை முடிக்கப்பட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடி சீல் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

  வெல்டிங் வைக்கப்பட்ட டாஸ்மாக் கதவுகள்


  அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டதை தவிர்த்து இருப்பு உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் ஊரடங்கு காலத்தில் கொள்ளை போக வாய்ப்பு உள்ளது என்பதால் நெல்லையில் அனைத்து கடைகளுக்கும் சீல் வைத்ததோடு, கதவை யாரும் உடைக்கவோ, திறக்கவோ முடியாத  அளவில் இரும்பு கம்பிகள் கொண்டு கதவு வெல்டிங் செய்யப்பட்டு கடைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  கடந்த ஊரடங்கின் போது பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர் - ஐயப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: