தமிழக அரசின் பட்ஜெட் முழு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் பூர்த்தி செய்யப்படவில்லை என்று பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்தில் இன்று பாஜக கட்சி தரப்பில் இளைஞர்கள், இளம்பண்கள் விளையாட்டு துறையில் ஊக்குவிக்கும் விதமாக குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்று முதல் துவங்கியது.
அண்ணா ஸ்டேடியத்தின் மற்றொரு புறத்தில் உள்விளையாட்டு அரங்கில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கராத்தே போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப் இருவரும் எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள அங்கு இருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பை நேரில் சென்று சந்தித்து தங்களது விளையாட்டு போட்டியையும் துவக்கி வைக்க கோரிக்கை விடுத்தார்.
ALSO READ | டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டி ஓசி மதுபாட்டில் மற்றும் பணம் வசூல்: வைரலான வீடியோ -வி.சி.க ஒன்றிய செயலாளர் கைது
இதனை ஏற்றுக்கொண்ட பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் மற்றும் நெல்லை மாநகர மேயர் சரவணன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ‘திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை விளையாட்டு துறையில் அதிகமாக ஈடுபடுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 15 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். 10,000 பேர் வரை கலந்து கொண்டார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கினோம்.
அடுத்ததாக அந்த 15 இடங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்து இன்று போட்டிகள் நடத்தி வருகிறோம். முதல்முறையாக இந்த போட்டிகளை நடத்துகிறோம். இதன்மூலம் வரும் நாட்களில் மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு களமாக இது அமைக்கப்படும். திமுகவினர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு குறித்து பேசி அரசியல் மட்டுமே நடத்துகிறார்கள்.
ALSO READ | 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டட மேஸ்திரி சிறையில் அடைப்பு
விவசாய பட்ஜெட்டை பொறுத்தவரை சிறு பயிறு, காணம், சிறுதானியம் இதற்கு ஒரு மண்டலம் அமைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். விவசாயத்தை பொறுத்தவரைக்கும் கோடிக்கணக்கான பேர் விவசாய தொழிலில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அறுவடைக்கான கருவிகள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள் அது அனைவருக்குமே கொடுத்தால் நன்றாக இருக்கும்.
தமிழக அரசின் பட்ஜெட் முழு திருப்தி அளிக்கும் வகையில், மக்களின் எதிர்பார்ப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் என்ற அடிப்படையில் திட்டத்தை மாற்றியுள்ளார்கள். அடுத்து வரும் அரசு இதனை மாற்றி வேறு ஒன்றாக கொண்டு வருவார்கள் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : ஐயப்பன், திருநெல்வேலி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.