Home /News /tamil-nadu /

தமிழக பட்ஜெட் - நெல்லை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

தமிழக பட்ஜெட் - நெல்லை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய தொழில்வளத்தை ஈர்ப்பதற்கான ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

கல்லூரிகள் உண்டு தொழிற்சாலைகள் ஐடி நிறுவனங்கள் இல்லை வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் நெல்லை மாவட்ட மாணவர்கள் தமிழக பட்ஜெட் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முதல் முழு பட்ஜெட் வரும் 18 ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கைகயை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் முக்கிய வாக்குறுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நெல்லை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு விதமாக உள்ளது. சென்னை மதுரை போன்று திருநெல்வேலி பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். கிழக்கே இராமநாதபுரம் மாவட்டம் மேற்கே கேரள மாநிலம் தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் வடக்கே விருதுநகர் மாவட்டம் என பரந்து விரிந்து 18 சட்டப்பேரவை தொகுதிகள் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் ஐந்து வகை நிலங்கள் குற்றால நீர்வீழ்ச்சிகள் வற்றாத ஜீவநதி தாமிரபரணி  என அனைத்து வளங்களுடன் காணப்பட்ட மாவட்டம்.

Also Read: தமிழக பட்ஜெட்: பின்னலாடை உற்பத்தியாளர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்

தற்போது தூத்துக்குடி தென்காசி மாவட்ட பிரிவினைகளுக்கு பிறகு சுருங்கி 5 தொகுதிகள் ஒரு பாராளுமன்ற தொகுதி என்ற நிலையை அடைந்துள்ளது. ஜீவநதி தாமிரபரணியும் ஐந்து வகை நிலங்களுமே மாவட்டத்தில் மிச்சமாக உள்ளது. முழுக்க விவசாயத்தையே நம்பி இருந்தாலும் இங்கு கல்வி கற்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. அரசு மருத்துவ கல்லூரி, சித்த மருத்துவ கல்லூரி பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்தும்  மாவட்டத்தில் உள்ளது.

இதன் காரணமாக ஏழை எளிய மாணவர்கள் குறைந்த செலவில் கல்வி கற்க முடிகிறது. ஆனால் கல்லூரி கல்வி முடித்த மாணவ மாணவியர்  தாங்கள் பயின்ற கல்வி துறை சார்ந்து பணியாற்ற மாவட்டத்தில் போதுமான தொழில்வளம் இல்லை. அண்டை மாவட்டமான தூத்துக்குடியில் இருக்கும் தொழில்சாலைகளில் 10 சதவீத தொழிற்சாலைகள் கூட நெல்லையில் இல்லை. அரசு துறைகளான கூடன்குளம் அணுமின்நிலையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கப்பற்படை தளம் போன்றவை இருந்தாலும் அதில் உள்ளுர்வாசிகள் வேலை பெறுவது மிகவும் குறைவு.

தமிழகத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் கனவு திட்டமாக கொண்டு வரப்பட்ட நாங்குனேரி உயர் தொழில்நுட்ப பூங்கா சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது ஆனாலும் தற்போது வரை குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த தொழிற்சாலைகளும் வரவில்லை. கங்கைகொண்டான் பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு சில நிறுவனங்கள் வந்துள்ளது ஆனாலும் மாவட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில் 5 சதவீத அளவிற்கு கூட வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.

Also Read: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

இதன்காரணமாக படிப்பை முடிக்கும் மாணவர்கள் சென்னை பெங்களுர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் நிலையே உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவிலும் நிறவனங்கள் ஏதும் செயல்படவில்லை. கொரோனா காலங்களில் வெளியூர்களில் இருந்து மாவட்டத்திற்கு வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தங்க வைப்பதற்கு மட்டுமே பயன்பட்டது. இங்குள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளதால் பொருளாதார வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது.

தமிழக அரசு இந்தாண்டில் 3 தொழில்முனைவோர் மாநாடுகளை நடத்தி புதிய  தொழில்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுவரை 1லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு மாவட்டத்திற்குள்ளேயே வேலை கிடைத்தால் பொதுமக்கள் இடம் பெயர்வதை தடுக்க முடியும் அனைத்து மாவட்டங்களிலும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் வரும் பட்ஜெட்டில் தென் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய தொழில்வளத்தை ஈர்ப்பதற்கான ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் மாணவர்கள் விரும்புகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: DMK, Industrial output, MK Stalin, Thirunelveli, TN Budget 2022

அடுத்த செய்தி