BREAKING: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு

BREAKING: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு

BREAKING

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Share this:
    திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான கூடன்குளம், கூட்டப்புளி, ராதாபுரம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை நில அதிர்வு நீடித்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், நாகர்கோவில் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, அசாமில் நேற்று அடுத்தடுத்து மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டது.

    அதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு மேகாலயா, மேற்கு வங்க மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. அசாமைப் பொறுத்தவரையில், நில அதிர்வின் காரணமாக பல கட்டங்கள் சேதமடைந்தன. வடக்கு கவுஹாத்தியில் 17 கி.மீ ஆழத்தில் மூன்று முறை நில நடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல, அண்டை நாடான பூட்டானிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டிலும் கடலோர மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: